தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். மாணவர்களால் விதைப்பந்துகள் தயாரிப்பு

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு இளநிலை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால், சமுதாய நோக்கோடு விதைப்பந்துகள் எனும் உயிர்பந்துகள் தயாரிக்கப்பட்டது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு இளநிலை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால், சமுதாய நோக்கோடு விதைப்பந்துகள் எனும் உயிர்பந்துகள் தயாரிக்கப்பட்டது. 



சமீபகால மாற்றங்களாலும், நகரமயமாதல் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மரங்கள் அழிக்கப்பட்டு, பூமியே பாலைவனமாக மாறிவருவதை எவரும் மறுத்திட முடியாது. பருவநிலை மாறுபாட்டால், பருவமழையும் பொய்த்து வருகிறது. இச்சூழ்நிலையைச் சமன்படுத்த மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மகத்துவமான முயற்சி இவ்விதைப்பந்துகள் என கருதப்படுகிறது. மழை வளம் பெருக பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் மரம் வளர்ப்பதே நிரந்தர தீர்வைத் தரும் என அறிந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி மகத்துவமான வெற்றியடையும் என நம்புவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 



கல்லூரியின் வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வேப்பமர விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டது. இவ்விதைப்பந்துகள் நாட்டு நலப்பணித் திட்ட மாணக்கர்களால் தத்தெடுக்கப்பட்ட வெள்ளமடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விதைக்கப்பட இருக்கிறது.

Newsletter