கோவையில் பயிர்‌ காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர்‌ அழைப்பு

கோவை : பிரதம மந்திரியின்‌ புதிய பயிர்க்‌ காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து, தங்கள்‌ பயிரினை காப்பீடு செய்து வருவாய்‌ பாதிக்கா வண்ணம் விவசாயிகள்‌ பயன்‌பெற வேண்டும்‌ என கோவை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்‌.

கோவை : பிரதம மந்திரியின்‌ புதிய பயிர்க்‌ காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து, தங்கள்‌ பயிரினை காப்பீடு செய்து வருவாய்‌ பாதிக்கா வண்ணம் விவசாயிகள்‌ பயன்‌பெற வேண்டும்‌ என கோவை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்‌.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2016-17-ம்‌ ஆண்டில்‌ துவக்கப்பட்ட இக்காப்பீட்டுத் திட்டம்‌, நடப்பு 2019-20-ம்‌ ஆண்டிலும்‌, நடப்பு காரிஃப்‌ பருவத்தில்‌ நடைமுறைக்கு வந்துள்ளதால்‌, கோவை மாவட்டத்தின்‌ அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய்‌ கிராமங்களைச்‌ சேர்ந்த அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிட உள்ள விவசாயிகள்,‌ இத்திட்டத்தில்‌ சேர்ந்து பயன்பெறலாம்‌. அந்த வகையில்‌, குறுவை பருவ நெல்‌, சோளம்‌, மக்காச்சோளம்‌. நிலக்கடலை, பாசிப்பயிறு, உளுந்து, துவரை, கொள்ளு, என்‌ மற்றும்‌ பருத்தி ஆகிய வேளாண்‌ பயிர்கள்‌, பயிர்க்காப்பீடு செய்து கொள்ள தகுதியானவை.

காப்பீட்டுத்‌ தொகையாக, விவசாயிகள்‌, கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறையினரால்‌ அங்கீகரிக்கப்பட்ட பயிர்‌ சாகுபடி செலவினத்‌ தொகையில்‌, 2 முதல்‌ 5 சதவீத தொகையை மட்டும்‌ பிரிமியமாக செலுத்தினால்‌ போதும்.  ஒப்புதல்‌ அளிக்கப்பட்ட மீதமுள்ள பிரிமியத்‌ தொகையினை அரசே ஏற்றுக்கொள்ளும்‌. இந்த வகையில்‌, பருத்தி பயிருக்கு 5 சதவீதமும்‌, இதர அறிவிக்கப்‌பட்ட பயிர்களுக்கு 2 சதவீதமும்‌ பிரிமியம்‌ தொகையாக. செலுத்தினால்‌ போதுமானது.

‌இத்திட்டத்தின்‌ கீழ்‌ மூன்று விதமான இழப்புகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. அதாவது, போதுமான நீர்‌ இல்லாததால்‌, தவிர்க்கப்பட்ட விதைப்பு, விதைத்த பயிர்களில்‌, இயற்கை இன்னல்களால்‌ ஏற்படும்‌ இழப்பு அறுவடைக்குப் பின், இருவார  காலத்துக்குள்‌, புயல்‌ மற்றும்‌ அதி மழையால்‌ உலர்களத்தில்‌ ஏற்படும்‌ இழப்பு என மூன்று விதமான இழப்புகளுக்கு காப்பீடு செய்து

கொள்ளலாம்‌. சோளம்‌, கொள்ளு மற்றும்‌ எள்ளு பயிருக்கான இழப்பீடு குறுவட்ட அளவில்‌ ஏற்பட்ட பாதிப்பினைப்‌ பொறுத்தும்‌, இதர பயிர்களுக்கான இழப்பீடு, வருவாய்‌ கிராம அளவில்‌ ஏற்பட்ட பாதிப்பினைப்‌ பொறுத்தும்‌, காப்பீட்டு நிறுவனத்தால்‌ தீர்மானிக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்‌.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும்‌ தொடக்கக்கூட்டுறவு வங்கிகளில்‌ பயிர்க்கடன்‌ பெறும்‌ விவசாயிகளுக்கு இத்திட்டம்‌ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன்‌ எதுவும்‌ பெறாத விவசாயிகள்‌ தன்‌ விருப்பத்தின்‌ பேரில்‌, பொது சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பித்து உரிய பிரிமியம்‌ தொகையை செலுத்தி பயிர்க்‌ காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கர்‌ காப்பீட்டுக் கட்டணமாக, நெல்லுக்கு ரூ. 644, சோளத்திற்கு ரூ. 207, மக்காசோளத்திற்கு ரூ. 534, அனைத்து பயிறு வகைப்பயிர்களுக்கு ரூ. 315, நிலக்கடலைக்கு ரூ. 550, பருத்திக்கு ரூ. 1,290 விவசாயிகள்‌ செலுத்த வேண்டும்‌. 

இம்மாவட்டத்திற்கு ஓரியண்டல்‌ பொது காப்பீட்டு நிறுவனம்‌, பயிர்க்காப்பீட்டு நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதன்‌ கள அலுவலர்களை வட்டார அளவில்‌ நியமிக்கவும்‌ அறிவறுத்தப்‌பட்டுள்ளது. அவர்களைத்‌ தொடர்பு கொண்டு இத்திட்டம்‌ குறித்த விளக்கங்கள்‌ பெறலாம்‌. இத்திட்டம்‌. கோவை மாவட்ட விவசாயிகளைச்‌ சென்றடைய ஏதுவாக, வேளாண்மைத்‌ துறையினரால்‌. கிராம அளவில்‌ விளக்கக்‌ கூட்டங்கள்‌ நடத்தவும்‌, வட்டார அளவில்‌ தகவல்‌ மற்றும்‌ சேவை மையங்களை அமைத்து, விவசாயிகளுக்கு இத்திட்டத்தில்‌ சேர வேண்டிய உதவிகளை செய்யவும்‌ மாவட்ட நிர்வாகத்தினால்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விவசாயிகள்‌, கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அடங்கல்‌, சிட்டா, ஆதார்‌ அட்டை மற்றும்‌ தம்‌ பெயரிலுள்ள வங்கிக்‌ கணக்கு புத்தக முதல்‌ பக்க ஒளி நகல்‌ ஆகியவற்றுடன்‌ பொது-சேவை மையங்களை அணுகி, உரிய தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்‌. சுய சேவை மையங்களில்‌ இச்சேவை முற்றிலும்‌ இலவசமாக செய்து தரப்படுகிறது.  எனவே, கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தகுதியுள்ள விவசாயிகளும்‌ இத்திட்டத்தில்‌ சேர்ந்து பயனடையவும், எனத்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter