இந்தியாவின் முதன்மை வேளாண் கண்காட்சி 'அக்ரி இன்டெக்ஸ் 2019' கோவையில் நாளை தொடக்கம்

கோவை : கொடிசியா சார்பில் 'அக்ரி இன்டெக்ஸ் 2019' எனும் இந்தியாவின் முதன்மையான வேளாண் கண்காட்சி கோவையில் நாளை தொடங்குகிறது.

கோவை : à®•ொடிசியா சார்பில் 'அக்ரி இன்டெக்ஸ் 2019' எனும் இந்தியாவின் முதன்மையான வேளாண் கண்காட்சி கோவையில் நாளை தொடங்குகிறது. 

விவசாயத்தில் மாற்றம் கொண்டு வரவும், வேளாண்மையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கிலும், ஆண்டுதோறும் 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி நடத்தப்படுகிறது. இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களை சேர்ந்த 450 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வேளாண் இயந்திரங்கள், நீர் பாசனம் மற்றும் தானியங்கி கருவிகள், கால்நடை பராமரிப்பு, பால்பண்ணை தொழில்நுட்பம், வேலிகள் மற்றும் மறைப்பு வலைகள், பசுமை வீடுகள், மாடித்தோட்டம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், உரம், எடை மற்றும் சோதனை கருவிகள், அரசு துறைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களை இக்கண்காட்சியில் இடம்பெறுகிறது. இந்தக் கண்காட்சி நாளை முதல் 15-ம் தேதி வரை நடக்கிறது. 

Newsletter