கோவையில் தாவர ஒட்டுண்ணி நூற்புழு மேலாண்மை பற்றிய கலந்தாய்வு கூட்டம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நூற்புழுத் துறை சார்பில் தாவர ஒட்டுண்ணி நூற்புழு மேலாண்மை பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நூற்புழுத் துறை சார்பில் தாவர ஒட்டுண்ணி நூற்புழு மேலாண்மை பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நூற்புழுத் துறை சார்பில் பாதிக்கப்பட்ட நடவுப் பொருட்களின் மூலம் நூற்புழுப் பரவல் மற்றும் அதனால் ஏற்படும் பண்ணைத் தோட்ட மகசூல் பற்றியும் பல செயல்முறை விளக்கக் கூட்டம் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட பழப் பண்ணை தோட்டங்களில் நூற்புழுத் தாக்கங்கள் மிகுதியாக கண்டறியப்பட்டன. நூற்புழு ஒரு நுண்ணிய புழு. இவை அனைத்து மண் மற்றும் பயிரிடப்பட்ட பயிர்களில் வாழக்கூடியவை ஆகும். உழவர்கள் நூற்புழுக்களினால் ஏற்படும் தாக்கத்தினை கண்டறிவதில்லை. இதற்கிணங்க, நூற்புழுவியல் துறையின் மூலம் ஒருநாள் கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நீ. குமார் தலைமையில் கள நோயறிதல் மற்றும் தோட்டக் கலைத் தாவர ஒட்டுண்ணி நூற்புழு மேலாண்மை என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஒரு நாள் கலந்தாய்வுக் கூட்டத்தின் மூலம் நூற்புழு இல்லா நடவு பொருட்களின் செயல் விளக்கமுறைகளை மாநில விரிவாக்கத்துறை, கள அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் தனிமைப்படுத்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. நூற்புழுவினால் ஏற்படும் தாக்கத்தினை கண்டறிவதற்கான முறையை இந்த ஒரு நாள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நேரடி செயல் விளக்கமுறைகள் மற்றும் நூற்புழு இல்லா நடவு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான ஆலோசனை வழங்கப்படட்டது.

இந்நிகழ்வில், அகில இந்திய ஆராய்ச்சி திட்டம் (நூற்புழுவியல் துறை) ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன் மற்றும் டெல்லி இந்திய விவசாய ஆராய்ச்சிக் குழுவின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் உமாராவ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

Newsletter