தேங்காய் மற்றும் கொப்பரை விலைகள் குறைய வாய்ப்புள்ளது : தமிழ்நாடு வேளாண் பல்கலை., அறிவிப்பு

கோவை : தேங்காய் மற்றும் கொப்பரை விலைகள் எதிர்கால குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவை : தேங்காய் மற்றும் கொப்பரை விலைகள் எதிர்கால குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

உலகில் தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தேசிய தோட்டக்கலை வாரியம் 2018-19 ஆம் ஆண்டின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, தேங்காய் 21.27 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 163.83 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் 90 சதவீதத்தற்கு மேல் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் கோவை திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகியவை தேங்காய் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.

தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்கள் ஐக்கிய அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள், குவைத் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

தற்போது, கொப்பரை வரத்தானது தாராபுரம், பல்லடம், சேலம், திண்டுக்கல், தேனி, ஈரோடு, பழநி மற்றும் கம்பம் ஆகிய இடங்களிலிருந்து பெருந்துறை சந்தைக்கு வருகிறது. கேரளாவிலிருந்து, தேங்காய் மற்றும் கொப்பரை வருகை ஏற்கனவே தொடங்கிவிட்டது. மேலும், கர்நாடக தேங்காய் வரத்தானது ஜூன் மாதம் இறுதியிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக மூலங்களின் படி, இந்தோனேசியாவிலிருந்து கொப்பரை இறக்குமதி செய்யப்படுமானால் உள்நாட்டு சந்தையில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின்; விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 18 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை மற்றும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்திலும் சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது. 

ஆய்வு முடிவின் அடிப்படையில் ஜுலை - ஆகஸ்ட் 2019 வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ. 12 முதல் ரூ.13 வரை மற்றும் நல்ல தரமான கொப்பரை கிலோவுக்கு ரூ. 86 முதல் ரூ. 88 வரை இருக்கும் என அறியப்படுகிறது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில்;; விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்-641 003

தொலைபேசி -0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள 

பேராசிரியர் மற்றும் தலைவர்

வாசனை மற்றும் மலைத்தோட்டபயிர்கள்துறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்-641 003.

தொலைபேசி எண் -0422-6611284

மக்கள் தொடர்பு அலுவலர்

Newsletter