தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் புனே தனியார் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை : புதிய கற்றல் மையம் தொடங்குவதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், புனேவைச் சேர்ந்த ஜான்டீர் டிராக்டர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

கோவை : புதிய கற்றல் மையம் தொடங்குவதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், புனேவைச் சேர்ந்த ஜான்டீர் டிராக்டர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் புனே ஜான்டீர் டிராக்டர் நிறுவனம் இணைந்து மாணவர்களின் திறனைப் பெருக்குவதற்கான புதிய கற்றல் மையம் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை குமுளூரில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைவேந்தர் நீ. குமார் முன்னிலையில் நேற்று கையெழுத்தாகியது. இந்த கற்றல் மையம் மூலம் மாணவர்கள் களப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும், திறன் மேன்மை பெற்று உடனடி வேலைவாய்ப்பினை பெறவும், படிக்கும் காலத்திலேயே நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் இது வழிவகை செய்யும்.

Newsletter