கோவையில் அரசு உண்டு உறைவிட பள்ளிகளில் தோட்டம் அமைக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோவை : கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் உண்டு உறைவிட பள்ளிகளில் பள்ளி தோட்டம் அமைக்கும் விதமாக, அப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் இன்று வழங்கப்பட்டது.


கோவை : கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் உண்டு உறைவிட பள்ளிகளில் பள்ளி தோட்டம் அமைக்கும் விதமாக, அப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் இன்று வழங்கப்பட்டது. 



வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் என்பதையெல்லாம் தாண்டி, தற்போது பள்ளிகளில் தோட்டம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் மாணவர்களிடமும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு எழத் தொடங்கியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளித்து பள்ளிகளில் விவசாய தோட்டம் அமைத்து மாணவர்களே பராமரித்து பயன்பெறும்படி திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. அதன்படி, கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் உண்டு உறைவிட பள்ளிகளில் பள்ளி தோட்டம் அமைக்கும் விதமாக, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடந்தது.



இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் செய்தியளர்களிடம் பேசினார். 



அவர் பேசுகையில், "தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. அவர்கள் உடல் அளவில் வலுப்பெற வேண்டும். அதற்கு சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் அவசியம். இதற்காக எடுக்கின்ற முயற்சியாக பள்ளியில் உள்ள காலி இடங்களில் விவசாயம் செய்திடும் வகையில், பல்வேறு ஆலோசனை மற்றும் பயிற்சிகளை அரசுடன் இணைந்து மாணவர்களுக்கு வழங்க உள்ளோம்," எனத் என தெரிவி்தார்.

இது குறித்து வேளாண்மை கொள்கை மற்றும் திட்ட மாநில குழுமத் தலைவர் ஜெகன் மோகன் கூறியதாவது :- மாநிலத்தில் கல்வியில் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளாக 14 மாவட்டங்கள் உள்ளது. இதில், மிகவும் பின்தங்கி 14 இடங்களை தேர்வு செய்து, அதில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், நல்ல சத்தான காய்கறிகளை உண்ண வழி வகை செய்யும் திட்டமான பள்ளிகளில் விவசாயம் செய்வது குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது, எனத் தெரிவித்தார்.

"தனி மனித மேம்பாடு, மகளிர் முன்னேற்ற, சுயதொழில் கற்றல், சமூக பங்களிப்பு என பல வகையான திட்டங்களை அரசு செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதில், ஒன்றுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், நஞ்சில்லா உணவு முறையும். ரசாயன உரத்தின் தாக்கத்தால் விவசாயமும், விவசாய நிலமும் பாழ்பட்டுப் போய்விட்டது. இப்போது தான் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த திட்டம் பொது மக்களை விட பள்ளிக்கூட மாணவர்களிடம் இருந்து தொடங்கலாம் என அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி எடுத்துக் கூறி பள்ளிகளிலேயே தோட்டம் அமைத்து, அவர்களை அதில் ஈடுபடுத்த வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி, பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் தரப்படுகிறது," என தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். 

Newsletter