வேளாண் பல்கலை.,யில் பட்டதாரிகளுக்கு 5 நாள்பயிற்சி

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி வழங்கப்படுகிறது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி வழங்கப்படுகிறது. 

ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்ற இளைஞர்கள் முதல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் இப்பயிற்சியில் பயிற்றுவிக்கப்படுகிறது. 

இப்பயிற்சி கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஜுன் 17 முதல் ஜுன் 21-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு தொலைபேசி எண் : 0422 - 6611310.

Newsletter