உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலை., மாணவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலை., மாணவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலை., மாணவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. 

ஒவ்வொரு வருடம் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் துறை இந்த வருடத்தின் கருபொருளான காற்று மாசுபாட்டை முறியடிப்போம் என்பதை முன்னிறுத்தி 6 மற்றும் 7-ம் தேதிகளில் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நீ.குமார் மறுசீரமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தார். இதன் மூலம், பல்கலைக்கழகத்திலுள்ள கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவுள்ளது. அதை தொடர்ந்து, துணைவேந்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மரங்களை நட்டனர். அரசுசாரா நிறுவனமான நிழல் மையத்தின் முருகன் மற்றும் நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினர்.



மேலும், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் வேளாண் கல்லூரியின் முதன்மையர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். பயிர் வினையியல் துறையிலிருந்து பேரணி தொடங்கி திட்டசாலை, மருதமலை சாலை வழியாக சென்று சுற்றுச்சூழலியல் துறை வரை 300 மாணவர்களும், 50 ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 



சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் தாங்கிய வண்ணம் முகக்கவசம் அணிந்தவாறு மாணவர்கள், காற்று மாசுபாட்டை முறியடிப்போம், என கோசமிட்டு சென்றனர். சுற்றுச்சூழலியல் துறை மற்றும் கோர்டிவா அக்ரிசயின்ஸ் நிறுவனம் சேர்ந்து பாதுகாப்பான பூச்சிகொல்லி பயன்பாடு குறித்து பயிற்சி வகுப்பை நடத்தியது. இயற்கை வள மேலாண்மையின் இயக்குனர் டாக்டர் அர. சாந்தி, பதிவாளர் எ.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோர்டிவா அக்ரிசயின்ஸ் நிறுவனத்தின் டாக்டர் எ. பரணி தீபன் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 110 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியாக, சுற்றுச்சூழலியல் துறை தலைவர் டாக்டர் கி.வள்ளியப்பன் நன்றியுரை கூறி நிகழ்வை முடித்து வைத்தார்.

Newsletter