தமிழக விவசாயிகளை மகிழ்விக்கும் சின்ன வெங்காயத்தின் விலை

கோவை : விதை நோக்கத்திற்காக சேமித்து வைப்பு மற்றும் மிகக் குறைவான சந்தை வரத்து போன்ற காரணங்களிலும் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது உயர்வாக உள்ளது.

கோவை : விதை நோக்கத்திற்காக சேமித்து வைப்பு மற்றும் மிகக் குறைவான சந்தை வரத்து போன்ற காரணங்களிலும் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது உயர்வாக உள்ளது. 

நம் நாட்டின் மொத்த சின்ன வெங்காயத்தின் உற்பத்தி மற்றும் நுகர்வில் தமிழ்நாடு முதன்மையாக விளங்குகிறது. திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் பாரம்பரியமாக சின்ன வெங்காயத்தை பயிரிடுகின்றனர். ஏற்கனவே, குன்றி வரும் பெரிய வெங்காய சாகுபடி பரப்பிலும், தற்போது சின்ன வெங்காயம் பெருமளவில் பயிரிடப்படுகிறது.

வர்ததக மூலங்களின்படி, குன்றிய மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தியானது, அதன் இயல்பை விட பாதியாகக் குறைந்துள்ளது. வெங்காய வரத்தானது பல்லடம் பகுதியிலிருந்து மட்டுமே சந்தைக்கு வருகிறது. விவசாயிகள் கோ (à®’.என்) 5 என்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இரகத்தையே அதிகளவு பயிரிடுகின்றனர். இந்த இரகமானது அதிக மகசூல், இளஞ்சிவப்பு நிறம் மற்றும் பெரிய அளவு ஆகியவற்றால் அதிகளவு பயிரிடப்படுகிறது. இது, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளிலும் அதிகளவு விரும்பப்படுகிறது. ஆனால், சமீபத்தில் தென் கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறைவாகவே உள்ளது. தற்போது, பெரம்பலூர் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயமானது விதை நோக்கத்திற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாலும் மற்றும் மிகக் குறைவான சந்தை வரத்தாலும் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது உயர்வாக உள்ளது. 

கர்நாடகாவிலிருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்திலும் 50 சதவீதம் உற்பத்தி பாதிப்பால் தமிழக சந்தை வரத்து குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாத இறுதியில், மைசூர் மற்றும் சாம்ராஜ்பேட்டை பகுதியிலிருந்து வரும் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது. 

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில், நிலவிய சின்ன வெங்காயம் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், வரும் ஜூன் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 45 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகா வரத்து மற்றும் எதிர்கால ஏற்றுமதி தேவைகளைப் பொறுத்து சின்ன வெங்காயததின் விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயமுத்தூர் - 641 003

தொலைபேசி - 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும் 

பேராசிரியர் மற்றும் தலைவர்

காய்கறிப் பயிர்கள் துறை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர் - 641 003.

தொலைபேசி எண் - 0422-6611374

Newsletter