தொட்டிபாளையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை., மாணவர்களின் நாட்டுநலப் பணித் திட்ட முகாம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் தொட்டிபாளையத்தில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் தொட்டிபாளையத்தில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர் கோவை மாவட்டம், வெள்ளமடை ஊராட்சியில் நடத்தும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் நேற்று முன் தினம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரத்ததான முகாமை துளசி மருந்தகம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தின. மருத்துவர் கணேசன் மற்றும் குழுவினர் இம்முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுமார் 50 பேர் இரத்ததானம் செய்தனர். மேலும், வாசன் கண் மருத்துவமனையினர் இலவச கண் பரிசோதனை நடத்தினர். கண் பரிசோதனை முகாம் மருத்துவர்கள் பெட்ரிக், ரோஷினி மற்றும் சக்தி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் கண் சார்ந்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றப்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

கண் மருத்துவ முகாமைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு காளான் வளர்ப்பு பற்றிய செயல் விளக்கம் மற்றும் சிறப்புரை ஆற்றப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நோயியல் துறையின் இணைப் பேராசிரியர் கு. திருபுவனமாலா காளான் வளர்ப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார். இதில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காளான் வளர்ப்பை இலாபகரமான தொழிலாக மேற்கொள்ளும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பார்த்தீனியம் களைச்செடி ஒழிப்புப் பேரணியில் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்களுக்கு பார்த்தீனியத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 

Newsletter