தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ. குமாருக்கு இந்தியத் தோட்டக்கலை கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ. குமாருக்கு இந்தியத் தோட்டக்கலை கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

இந்திய தோட்டக்கலை கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் தோட்டக்கலையில் புதுமையான தொழில்நுட்பங்களைக் கையாளுதல் சம்பந்தமான உலகளாவிய கருத்தரங்கு உத்தரகாண்ட் மாநிலம் பந்த் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நீ. குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருது பேராசிரியர் நீ. குமாரின் தோட்டக்கலைத்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் வேளாண்மையில் மனித வள மேம்பாட்டினை உயர்த்தியதற்கும், சிறந்த கல்வி தலைமை தாங்கியதற்கும் இவ்விருது வழங்கப்பட்டது. மேலும், இவர் எட்டுக்கும் மேற்பட்ட நூல்களையும், 52 உலகலாவிய மற்றும் இந்திய அளவிலான 83 ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

உழவர் விவசாய பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் 42 உயர் ஆராய்ச்சிக் கட்டுரைகள், மாணவர்களுக்கான தொழில்நுட்ப கையேடுகள் எட்டினையும் மற்றும் வேளாண் விரிவாக்கக் கையேடுகளினையும் தயாரித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு மிகச்சிறந்த ஆசிரியராக பணியாற்றி 21 முதுகலை மாணவர்களையும், 13 முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களையும் வழிநடத்தி உள்ளார். இவர் மூன்று உலக அளவிலாவிய கருத்தரங்குகளையும், 12 தேசிய கருத்தரங்குகளையும் சிறப்பாக நடத்தியுள்ளார். இவர் ஆராய்ச்சி சம்பந்தமாக 15-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று பல்வேறு பல்கலைக்கழகங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளார். மேலும், இவர் 10 வகையான ரகங்கள் மற்றும் பல புதிய தொழில்நுட்பங்கள் வெளியிடுவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளார். 



இவ்வாறாக தோட்டக்கலைத்துறையில் மிகச்சிறந்த பங்காற்றியதற்காகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு இந்திய தோட்டக்கலை கூட்டமைப்பு சங்கத்தின் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

Newsletter