வரும் 30-ம் தேதி முதல் 2 நாட்கள் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் “மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி” வரும் 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடைபெறும். கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.

 

• மசாலா பொடிகள்

• தயார்நிலை பேஸ்ட்  

• வாழைப்பூ ஊறுகாய்  

• பாகற்காய் ஊறுகாய்  

• காளான் ஊறுகாய்

• கத்தரிக்காய் ஊறுகாய்

• வெங்காய ஊறுகாய்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 (ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள - 0422-6611340 , 6611268 , 94425 99125.

Newsletter