சப்போட்டா சாகுபடி செய்வது எப்படி?

சப்போட்டா சாகுபடி செய்வது எப்படி?

மண்:

*சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது.

*நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது.

*ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது.

பருவம்: à®œà¯‚லை – ஆகஸ்ட்.

ரகங்கள்: à®•ிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ-1, கோ-2, பெரியகுளம் 1, 2, 3.

பயிர் பெருக்கம்: ஒட்டுக்கட்டிய செடிகள்

பின்செய் நேர்த்தி:

*ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

*தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

*கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்க வேண்டும்.

*சப்போட்டா மரத்திற்கு கவாத்து செய்தல் தேவை இல்லை.

*உயரமாக வளரக்கூடிய ஒரு சில தண்டுகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.

*அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும்.

ஊடுபயிர்:

*ஆரம்ப வருடங்களில் மர வரிசைகளுக்கு நடுவே காய்கறிப் பயிர்களையும், குறுகிய காலப் பழப்பயிர்களான பப்பாளி போன்றவற்றையும் சாகுபடி செய்வதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்:

*சப்போட்டா பயிர் வருடத்திற்கு இரண்டு முறை பெரும்பான்மையாக காய்க்கும்.

*ஏப்ரல் முதல் ஜூலை வரை ஒரு முறையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஓரளவு காய்க்கும்.

*இந்தப் பயிரின் பழ முதிர்ச்சியை அறிவது சிறிது கடினம். இதர பயிர்களைப் போல் இதில் நிறமாற்றம் ஏற்படுவதில்லை.

*ஆயினும் பழத்தின் தோலில் உள்ள சிறிய சிறிய கருநிறத்துகள்கள் மறைந்து, பழங்கள் சிறிது பளபளவென்றிருக்கும்.

*பழத்தை நகத்தால் கீறிப்பார்த்தால், உள்ளே மித மஞ்சள் நிறம் தெரிய வேண்டும். பால் வடியக் கூடாது. பழத்தின் அடிப்பாகத்தில் உள்ள முள் போன்ற சிறிய நுனி, எளிதில் பிரிந்துவரும். பழத்தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகும்.

*ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன்கள் மகசூலாகக் கிடைக்கும்.

Newsletter