தமிழக விவசாயிக்கு அகில இந்திய அளவிலான விருது

கோவை : டெல்லியில் உள்ள அரசியல் நிர்ணய கழகத்தின் சார்பில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான அகில இந்திய முன்னோடி விவசாயிகள் மாநாட்டில், இந்திய உணவு மற்றும் விவசாய அமைப்பு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மேலாண்மைக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரனுக்கு வேளாண் விரிவாக்க விருது வழங்கப்பட்டது.


கோவை : டெல்லியில் உள்ள அரசியல் நிர்ணய கழகத்தின் சார்பில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான அகில இந்திய முன்னோடி விவசாயிகள் மாநாட்டில், இந்திய உணவு மற்றும் விவசாய அமைப்பு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மேலாண்மைக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரனுக்கு வேளாண் விரிவாக்க விருது வழங்கப்பட்டது.



 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தாண்டிக்குடி கிராமத்தைச் சார்ந்த ரவிச்சந்திரன். இவர் கடந்த 20 வருடங்களாக வேளாண் பட்டதாரிகளுக்கு உதவிடும் வகையில், தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கீழ் பழனிமலைப் பகுதி தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பற்றி விளக்கம் அளிப்பது, மாணவர்கள் விவசாயிகள் தோட்டங்களைப் பார்வையிடவும் ஆராய்ச்சி மாணவர்கள், ஆராய்ச்சி செய்திட நிலங்கள் ஒதுக்கி கொடுப்பது, முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுவது, தொழில் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகளை மேற்கொள்ள தன் தோட்டங்களிலேயே பயிற்சி கொடுப்பது போன்ற நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தப்படும் புதிய வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ள, ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் பயிற்சி அளிப்பது, அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன் அடையும் வகையில் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். 

இந்த நிலையில், இன்று அவரது சேவைகளைப் பாராட்டி டெல்லியில் வேளாண் விரிவாக்க விருது வழங்கப்பட்டது. மேலும், அஸ்ஸாம் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் மற்றும் அனைத்திந்திய விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற விவசாய சமுதாயத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்பிற்கான 2017ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான “ஹரித் க்ரந்தி விருது” இவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter