தமிழ்நாடு வேளாண் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் வினையியல் துறை மூலமாக இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் வினையியல் துறை மூலமாக இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிர் வினையியல் துறை மூலமாக இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி “அசாதாரண சு{ழலில் பயிர்களில் மிகுதியாக உருவாகும் நிலையற்ற ஆக்ஸிஜன் இயங்கு அயனிகள் மற்றும் மூலக்கூறுகளை அழிக்கும் தாவர நொதிகளின் மிக துல்லிய அளவாக்கம்” என்ற தலைப்பில் கடந்த 23-ம் தேதி நடந்தது. இதில், உயிரற்ற மற்றும் உயிருள்ள காரணிகளின் பாதிப்பை தாங்கி வளரும் பயிர்களைத் தேர்வு செய்வதில், நிலையற்ற ஆக்ஸிஜன் இயங்கு அயனிகளை அழிக்கும் தாவர நொதிகளை துல்லியமாக அளவிடுவது முக்கியமாக கருதப்படுவதாக பயிர் வினையியல் துறையின் தலைவர் பி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், பயிர் மேலாண்மை இயக்குநர் வி. கீதாலட்சுமி தனது வாழ்த்து உரையில், "சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை தாங்கி வளரும் புதிய பயிர் இரகங்களை உருவாக்க வேண்டும். நிலையற்ற ஆக்ஸிஜன் இயங்கு அயனிகள் மற்றும் மூலக்கூறுகள் தாவர செல்களை தீவிரமாக தாக்கி அழிக்கும் தன்மை உடையவை. வறட்சி, உயர் வெப்பநிலை, உப்புத் தன்மை, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் அதிகப்படியான சூரிய ஒளி, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது, பயிரானது அதிகளவில் நிலையற்ற ஆக்ஸிஜன் இயங்கு அயனிகள் மற்றும் மூலக்கூறுகளை உருவாக்குகிறது. இவைகள் தாவர செல்களை தாக்கி அழிக்கின்றன," என விளக்கினார்.

தொடர்ந்து, பயிற்சியில் பங்கேற்ற 20 மாணவர்களுக்கு முதன்மையர் (வேளாண்மை) எம். கல்யாணசுந்தரம் சான்றிதழ்களை வழங்கினார். 

Newsletter