தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் வேளாண் விஞ்ஞான அறிவியல் குறித்த 2 நாள் பயிற்சி பட்டறை தொடக்கம்

கோவை : வேளாண் விஞ்ஞான அறிவியல் குறித்த 2 நாள் பயிற்சி பட்டறை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.



கோவை : வேளாண் விஞ்ஞான அறிவியல் குறித்த 2 நாள் பயிற்சி பட்டறை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. 



தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநரகம் மற்றும் ஐதராபாத்தின் விவசாய தொழில்நுட்ப விண்ணப்ப ஆராய்ச்சி கல்வி மையத்தின் சார்பில் இந்த இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளான இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 15 விவசாய அறிவியல் மையங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். அவர்கள் 2019-20-ம் ஆண்டுக்கான செயல்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதோடு, வேளாண் தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேலாண்மை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் தொழில்நுட்ப பயன்பாடு ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், இந்த பயிற்சி பட்டறையில் சமர்பிக்கப்படும் செயல்திட்டங்களை மதிப்பீடு செய்தனர். இதைத் தொடர்ந்து, மதிப்பீட்டுக்குழுவின் அனுமதி பெற்று, அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட இருக்கின்றன. 



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என். குமார், விரிவாக்க கல்வி இயக்குநர் எம். ஜவஹர்லால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் கே.எஸ். சுப்ரமணியன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®®à®¿à®Ÿà®²à¯ மற்றும் கண்காணிப்பு இயக்குநர் ஜே. வெங்கட்பிரபு, ஐதராபாத்தின் ஐ.சி.ஏ.ஆர். - ஏ.டி.ஏ.ஆர்.ஐ.யின் இயக்குநர் ஒய்.ஜி. பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நாளை நடக்கும் 2-வது நாள் பயிற்சி பட்டறையில், எஞ்சிய 16 விவசாய அறிவியல் மையங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

Newsletter