தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் 2 நாள் நடக்கும் பயிர் ஒளிச்சேர்க்கை பயிற்சி இன்று தொடக்கம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பயிர் வினையியல் துறை நடத்தும் 'பயிரில் ஒளிச்சேர்க்கை மற்றும் நீர் பயன்பாட்டு திறனில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிற்சி இன்று தொடங்கியது.

இந்தப் பயிற்சி முகாமில் பயிர் வினையியல் துறையின் தலைவர் பி.ஜெயக்குமார், ஒளிச்சேர்க்கை மற்றும் நீர் பயன்பாட்டுத் திறன்களைக் கொண்டு பயிர்களில் உலர் எடை மேம்படுத்தும் முறையை எடுத்துரைத்தார். மேலும், நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கையை அளவிடும் வழிமுறைகளை அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, இயற்கைவள மேலாண்மையின் இயக்குநர் ஆர். சாந்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் பயிர் வினையியல் ஆராய்ச்சியாளர்களின் பங்கீட்டை விளக்கிக் கூறினார். இப்பயிற்சியின் மூலம் அவர் பயிற்சியாளர்களை பல்துறை ஆராய்ச்சி திட்டங்களைத் தொடங்க ஊக்குவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி கையேடுகள் வெளியிடப்பட்டது. 

உழவியல் துறை மற்றும் வேளாண் காலநிலை ஆய்வு மையத்தின் பேராசிரியர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டு பயிற்சியினை சிறப்பித்தனர். மேலும், இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினை சார்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter