காலநிலை, பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த சர்வதேச கூட்டமைப்பிற்கான பயிற்சி பட்டறை

கோவை : காலநிலை, பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த சர்வதேச கூட்டமைப்பிற்கான 3 நாள் பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

கோவை : காலநிலை, பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த சர்வதேச கூட்டமைப்பிற்கான 3 நாள் பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இங்கிலாந்து நாட்டின் குயின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் உலகளாவிய பன்னாட்டு சூழல் பிரச்சனைகள் ஆராய்ச்சி நிதியம் ஆகியன இணைந்து நடத்தும் காலநிலை, பல்லுயிர் பெருக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த சர்வதேச கூட்டமைப்பிற்கான பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் நீ.குமார் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்ததைப் பெருமையுடன் குறிப்பிட்ட அவர், அதிகரித்து வரும் தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி மூலம் ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 



பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் மீது ஏற்படும் தாக்கத்தின் விளைவுகள் எதிர்பாராத இயற்கைச் சீற்றங்கள் வழியாக நாட்டின் பல பகுதிகளில் உணர முடிகிறது. எனவே, இம்மூன்று தளங்களிலும் பன்னாட்டு கூட்டமைப்புகள் முலம் தீர்வு காண வழிவகை செய்வது அவசியம், எனக் கூறினார். 

இப்பயிற்சிப் பட்டறையில் அயர்லாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, கயானா, பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட மாசு கட்டுப்பாட்டுப் பொறியாளர்கள், வேளாண் பல்கலைக்கழகம், இந்திய நெல் ஆராய்ச்சி கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலிருந்து விஞ்ஞானிகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் 80 பேர் கலந்துகொண்டனர்.

Newsletter