தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் கனடா நாட்டு மாணவிக்கு பயிற்சி

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நூற்புழுவியல் சோதனைச் சாலை உத்திகள் பற்றிய கனடா நாட்டு மாணவிக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நூற்புழுவியல் சோதனைச் சாலை உத்திகள் பற்றிய கனடா நாட்டு மாணவிக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 



 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கனடாவில் உள்ள நோவா ஸ்கோஷியா ட்ரூரோவில் உள்ள டல்ஹவுசிப் பல்கலைக் கழகத்துடன் மாணவர்கள் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. 



அதன்படி, வேளாண் பல்கலைக் கழகத்தின் நூற்புழுவியல் துறையில் உள்ள நிபுணத்துவத்தைக் கொண்டு, இத்துறையில் கடந்த 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை டல்ஹவுசிப் பல்கலையின் முதுநிலை பயிலும் ஹன்னா ஆர்சனால்ட் என்ற மாணவிக்கு நூற்புழுவியல் சோதனைச் சாலை உத்திகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இப்பயிற்சி இம்மாணவியின் ஆய்வுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இப்பயிற்சி, வேளாண் பல்கலைக்கழக மாணவர் நல இயக்குநரகத்தின் முதன்மையர் ரகுசந்தர் மற்றும் பயிர் பாதுகாப்பு மைய இயக்குநரகத்தின் இயக்குநர் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்படுகிறது.

Newsletter