வேளாண் பல்கலையில்., 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான பயிர் நடவு விழா தொடக்கம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு பாடப்பிரிவு மாணவர்களுக்கான நெல் நடவு விழா தொடங்கப்பட்டது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு பாடப்பிரிவு மாணவர்களுக்கான நெல் நடவு விழா தொடங்கப்பட்டது. 



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் இளநிலை இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு பாடப்பிரிவில், முதல் ஆண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் உழவியல் பாடப்பிரிவில், முதல் இரண்டு ஆண்டுகளில் பயிர் சாகுபடி பற்றி படித்து தெரிந்து கொண்டு, பின் வரும் இரண்டு ஆண்டுகளில் அவற்றை களப் பணிகளில் செயல்படுத்துவர். அந்தக் களப் பணி அனுபவம் மூன்றாம் ஆண்டில் தொடங்கப்படுகிறது. 



ஐந்தாவது பருவத்தில் பருத்தி சாகுபடி செய்து, ஆறாம் பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் விதையை விதைத்து, அதை நடவு செய்கின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் 5 சென்ட் நிலம் இதற்கென ஒதுக்கப்படுகிறது. அதில், பெறப்படும் லாபம் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும். 



நடவு நடும் விழாவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நீ. குமார் மற்றும் பயிர் மேலாண்மைத் துறை இயக்குநர் வெ. கீதாலட்சுமி, வேளாண்மைக் கல்லூரி முதல்வர் ம. கல்யாணசுந்தரம் மற்றும் பிற அதிகாரிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு, மாணவர்களை ஊக்குவித்து நெல் நடவு விழாவை தொடங்கி வைத்தனர். மூன்றாம் ஆண்டு இளநிலை மாணவர்கள் கிட்டதட்ட 120 பேர் கலந்து கொண்டு பயிர் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter