'வேளாண் சந்தைப்படுத்துதலில் புதிய பரிமாணங்கள்' என்ற தலைப்பில் அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் துறைகளைச் சார்ந்த 30 அதிகாரிகளுக்கு “வேளாண் சந்தைப்படுத்துதலில் புதிய பரிமாணங்கள்” என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் துறைகளைச் சார்ந்த 30 அதிகாரிகளுக்கு “வேளாண் சந்தைப்படுத்துதலில் புதிய பரிமாணங்கள்” என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. 



மத்திய மற்றும் மாநில அரசுகள், விவசாயிகளுடைய வருமானத்தை அதிகரிக்கவும், பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகளில் சீர்திருத்தங்களுடன் கூடிய வேளாண் சந்தைப்படுத்துதல் ஒரு முக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது. வேளாண் சந்தைப்படுத்துதலில் புதிய முயற்சிகளாக மின்-தேசிய வேளாண் சந்தை, வேளாண் பொருட்கள் மற்றும் கால்நடை சந்தைச்சட்டம் 2017, மாதிரி ஒப்பந்த பண்ணை சட்டம் 2018 மற்றும் விவசாய உற்பத்தியாளர்களின் கூட்டுச் சந்தைப்படுத்துதல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.

இச்சூழலில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் ஜெய்ப்பூரிலுள்ள தேசிய வேளாண் விற்பனை நிறுவனம் ஆகியவை இணைந்து கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகத் துறைகளைச் சார்ந்த 30 அதிகாரிகளுக்கு “வேளாண் சந்தைப்படுத்துதலில் புதிய பரிமாணங்கள்” என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்த பயிற்சியில், பல்வேறு புது முயற்சிகளாக ஒப்பந்த பண்ணையம், மின் வேளாண் சந்தை, சேமிப்பு கிடங்கு போன்ற பல்வேறு தலைப்புகளில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வேளாண் விளைப்பொருட்கள் சந்தைச் சட்டம் 2003, வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் கால்நடை சந்தைப்படுத்துதல் சட்டம் 2017 போன்ற மத்திய, மாநில அரசுகளின் சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.

Newsletter