மதிப்பூட்டுதலின் மூலம் அறுவடை பின்சார் இழப்புகளைக் குறைப்பது குறித்த கருத்தரங்கு

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறுவடை பின்சார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் 4 நாள் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறுவடை பின்சார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் 4 நாள் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் உணவு பதன்செய் பொறியியல் துறை சார்பில் கடங்நத 12-ம் தேதி தொடங்கிய இந்த கருத்தரங்கில், நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் பா. ஸ்ரீதர் தனது சிறப்புரையில், "கடந்த 40 ஆண்டுகளாக அறுவடை பின்சார் இழப்புகளைக் குறைப்பதற்கு அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் மூலம் பதன்செய் பொறியியல் வல்லுநர்கள் ஆற்றிய ஒட்டு மொத்த பங்களிப்பை விவரித்தார்.



இந்திய வோளண் ஆராய்ச்சி கழகத்தின் வேளாண் பொறியியல் துறையின் இணை முதன்மை இயக்குநர் க. அழகுசுந்தரம் தனது உரையில் கூறியதாவது :- கோதுமை, வைக்கோலை எரிப்பதற்கு பதிலாக ‘ஹேப்பி சீடர்’ பயன்படுத்துதல் மூலம் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கப்படுகிறது. பன்னாட்டு விவசாய அபிவிருத்தி நிதி நிறுவனம் இந்தியாவில் உள்ள அறுவடை பின்சார் பொறியியற் தொழில்நுட்ப மையத்தினால் உருவாக்கப்பட்ட சிறந்த தொழில்நுட்பத்தை வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 1,000 கோடி நிதியினை அளித்துள்ளது, என்றார். மேலும், கூட்டு மற்றும் மதிப்புச் சங்கிலி வழி ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும், அதன்மூலம் விவசாயிகளைச் சென்றடையும் உடனடி பயன்களையும் வலியுறுத்தினார். 

வேளாண் பல்கலை துணைவேந்தர் நீ. குமார், அறுவடை பின்சார் இழப்புகளின் தற்போதைய நிலவரத்தை எடுத்துரைத்தார். இளநீர் பானமான நீராவின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்காகவும் மற்றும் விரைவாக நுகர்வோரை சென்று அடைவதற்கும் ஏதுவான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தினார். முருங்கை இலை பொடியின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார். மேலும், பிளாஸ்டிகை கொண்டு சிப்பமிடுதலுக்கு பதிலாக வாழையிலிருந்து சிப்பமிடும் பொருள் உருவாக்கப்பட வேண்டும், என கூறினார்.

Newsletter