வெப்பநிலையை சமாளிக்க விவசாயிகள் செய்ய வேண்டியவை என்னென்ன..?

கோவை : வெப்பத் தாக்குதலில் இருந்து பயிர்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற விவசாயிகள் செய்ய வேண்டிய முக்கியமான முறைகள் குறித்து இந்திய வானிலைத் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : வெப்பத் தாக்குதலில் இருந்து பயிர்களையும், கால்நடைகளையும் காப்பாற்ற விவசாயிகள் செய்ய வேண்டிய முக்கியமான முறைகள் குறித்து இந்திய வானிலைத் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரத்தை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர வெப்பநிலையாக 33 °à®šà¯†., முதல் 41 °à®šà¯†., ஆகவும், இரவுநேர வெப்பநிலை 24 °à®šà¯†., முதல் 28 °à®šà¯†., ஆகவும், கொடைக்கானல் மற்றும் உதகமண்டலம் ஆகிய பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை 19 °à®šà¯†., முதல் 24 °à®šà¯†., ஆகவும், இரவுநேர வெப்பநிலை 9 °à®šà¯†., முதல் 13 °à®šà¯†., ஆகவும் பதிவானது.

வரும் நாட்களுக்கான வானிலை மற்றும் விவசாயிகள் செய்ய வேண்டியவை குறித்து கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மேற்கு மண்டலப் பகுதிக்கு உட்பட்ட கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 °à®šà¯†., முதல் 37 °à®šà¯†.,ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22°à®šà¯†., முதல் 23°à®šà¯†., ஆகவும், காலைநேரகாற்றின் ஈரப்பதம் 70 முதல் 75 சதவிகிதமாகவும், மாலைநேர காற்றின் ஈரப்பதம் 30 சதவிகிதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 6 கி.மீ அளவுக்கு பெரும்பாலும், கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

எனவே, அதிக வெப்பநிலை மற்றும் மாலைநேர காற்றின் ஈரப்பதம் குறைவாக காணப்படுவதால், 30 நாள் வயதுடைய தைப்பட்ட சோளப் பயிருக்கு மேலுரமாக ஒரு எக்டருக்கு 22.5 கிலோ தழைச்சத்து உரத்தை இட்டு நீர் பாசனம் செய்யவும். 

வறண்ட வானிலை நிலவுவதால், முன்பட்ட கரும்பிற்கு ஒரு எக்டருக்கு 166 கிலோ யூரியா மற்றும் 75 கிலோ பொட்டாஷ் மேலுரமாக இட்டு மண் அணைத்து, போதுமான நீர்ப்பாசனம் செய்யவும்.

பகல் மற்றும் இரவுநேர வெப்பநிலை அதிகமாக இருப்பதால் ஒரு தென்னை மரத்திற்கு நாள் ஒன்றுக்கு 100 லிட்டர் தண்ணீரை சொட்டு நீர் பாசனமுறையில் பாசனம் செய்யவும். கறவை மற்றும் எருமை மாடுகளுக்கு தெளிப்பான் மூலம் உடல் முழுவதும் நீர் தெளிப்பதால், அதிக வெப்பத்தாக்கத்திலுருந்து பாதுகாக்கலாம். மேலும், போதுமான அளவு குடிநீர் வழங்கவும்.

அதிக வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் குறைவாக காணப்படுவதால், கறவை மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையினை காலை 7 மணி முதல் 10 மணி வரை மேற்கொள்ளவும். நிலவும் வானிலையில், ஐந்து இலை உடைய எள் பயிருக்கு உடனடியாக நீர்ப்பாசனம் செய்யவும். எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter