கோவை வேளாண் பல்கலை.,யில் வாழை விவசாயிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம்

கோவை : ஐ.டி.சி நிறுவனம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக நீர் மேலாண்மை மையம் சார்பில் வாழை விவசாயிகளுக்கான கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.


கோவை : ஐ.டி.சி நிறுவனம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக நீர் மேலாண்மை மையம் சார்பில் வாழை விவசாயிகளுக்கான கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.



'ஒளிமையமான எதிர்காலம்' என்ற தலைப்பில் வாழை சாகுபடியில் நீர் மற்றும் உர மேலாண்மை திட்டங்கள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் முனைவர். ஏ.ரவிராஜ், முனைவர். எஸ். பன்னீர்செல்வம், முனைவர். கே.நாகராஜன், முனைவர். எம்.இளையராஜா, முனைவர். பி. அருண்குமார் ஆகியோர் பங்கேற்று, வாழை விவசாயத்தில் நீர் மேலாண்மையின் முக்கியத்துவம், உரப் பயன்பாடு, பருவ நிலை மாற்றத்தின் தாக்கங்கள், வானிலை கண்கானிப்பின் முக்கியத்துவம், சொட்டு நீர் பாசனம் மற்றும் மண்வள அட்டையின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினர். இப்பயிற்சி வகுப்பில் 50-க்கும் மேற்பட்ட வாழை விவசாயிகள் கலந்துகொண்டனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஐ.டி.சி நிறுவனத்தின் சார்பில் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது.

Newsletter