சிறுகாடுகளை அமைக்கும் மியவாகி மரநடவு முறை

இந்த முறையானது பல வகையான மரங்களை அருகில் நடவு செய்வதை பற்றியதாகும். பொதுவாக ஒரு குழிக்குள் பல வகையான மரங்கள் நடப்படுகிறது.

இந்த முறையானது பல வகையான மரங்களை அருகில் நடவு செய்வதை பற்றியதாகும். பொதுவாக ஒரு குழிக்குள் பல வகையான மரங்கள் நடப்படுகிறது.

இதனால் ஒரு சிறிய பகுதியில் நெருக்கமாக பல சீரற்ற மரங்களை நடுநிலையோடு சேர்த்து நடுவதன் மூலம் பசுமையானது மீட்டேடுக்கப்படுகிறது.

ஜப்பானிய தாவரவியல் விஞானி Akira Miyawaki இதை கண்டு பிடித்தார்.

குறைந்த காலத்தில் ஒரு இடத்தில அடர்ந்த காடுகளை உருவாக்க இந்த முறை சிறந்தது. முதலில் சிறு காலத்துக்கு நீர் விடுவது அவசியம். அதன் பின் இந்த சிறு காடு தன்னை தானே பார்த்து கொள்ளும்.

இந்தியாவில் பல இடங்களில் இந்த வகை சிறு காடுகள் அமைக்க பட்டுள்ளன.

இதனை செயல்படுத்தும் முறை :

*100 சதுரடியில் இருந்து மியவாகி முறையில் மரங்களை நடலாம்.

*10 அடி அகலம் 5 அடி ஆழம் மற்றும் 60 மீட்டர் நீளத்திற்கு குழியை வெட்டிக் கொள்ள வேண்டும்.

*பின் இரண்டு நாட்கள் வெப்பம் தனிய குழியை ஆறவிடவேண்டும்.

*அந்த குழி முழுவதும் காய்கறி கழிவுகள், வாழை மட்டைகள் மற்றும் இலைகள், தென்னை ஓலைகள் மற்றும் மாட்டுச்சாணம் போன்றவைகளை நிரப்பவேண்டும்.

*இந்த கழிவுகளை நிரப்பும் போது, தென்னை ஓலைகளை அடுக்காக கொட்டி அதன் மீது மண் ஒரு அடுக்காக கொட்ட வேண்டும்.

*இதேபோல் காய்கறி கழிவுகள், வாழைமட்டை மற்றும் இலைகள் என ஒவ்வொரு இயறக்கை கழிவுகளுக்கு மேலும் மண் கொண்டு நிரப்பவேண்டும்.

*அதன் பிறகு குழி முழுவதும் நிரம்பி வழியும் வரை தண்ணீர் விட வேண்டும்.

*பின்னர் மண்ணைக்கொண்டு குழியை மூடிவிட வேண்டும்.

*மூன்று அல்லது நான்கு தினங்கள் கழித்து ஒரு அடியில் குறைந்தது 4 முதல் 6 வகையான, 10-12 நாட்டு மர கன்றுகளை நெருக்கமாக நடவு செய்ய வேண்டும்.

*ஈரப்பதத்தை நிலைநிறுத்த தேங்காய் நார்களை செடிகளின் இடையே நிரப்பலாம்.

*தேவையெனில், சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம் மரங்கள் குறைந்த தண்ணீர் செலவில் வேகமாக வளர்க்கலாம்.

*பஞ்சகாவியம் தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு சேர்ப்பதன் மூலம் மரங்களுக்கு இன்னும் சிறப்பு.

*அரச மரம், ஆல மரம், வேம்பு, மா மரம், அரளி, மூங்கில், தேக்கு, மகாகொனி, சரக்கொன்றை, அத்தி, பிய்யன் போன்ற மரங்களை இந்த முறை நடவுக்குப் பயன்படுத்தலாம்.

*இதன் மூலம் சிறிய இடத்தில் பெரிய ஆக்ஸிஜன் தொழிற்ச்சாலையை சிறப்பாக அமைக்க முடியும்.

*இந்த முறையை குறிப்பாக வளாக ஓரங்களில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெசர்வ்ட் சைட்கல், பள்ளி, கல்லுரி வளாகங்கள் என பயன்படுத்தும் போது மாசை குறைப்பதோடு அந்த பகுதியை இயற்கையாகவே வெப்பத்தில் இருந்து பெருமளவு காப்பாற்றுகின்றது.

Newsletter