Exclusive: தோட்டக்கலை பயிர்கள் நடவுக்கு 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை பயன்படுத்த அறிவுரை

கோவை : சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில், தோட்டக்கலை பயிர்கள் நடவு செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கூலி ஆட்கள் வழங்கப்படுவதைப் பயன்படுத்திக் கொள்ள ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை : சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில், தோட்டக்கலை பயிர்கள் நடவு செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கூலி ஆட்கள் வழங்கப்படுவதைப் பயன்படுத்திக் கொள்ள ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஊராட்சிகளில் உள்ளவர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. இதில், மரக்கன்றுகள் நடவு செய்தல், துப்புரவு பணிகள் மேற்கொள்ளுதல், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாருதல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில், நடப்பு ஆண்டு முதல் விவசாய பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தோப்புகளில் வரப்பு கட்டுதல், பண்ணைக்குட்டை அமைத்தல், தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், சிறு, குறு விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தோட்டக்கலை பயிர்கள் நடவு செய்வதற்கான கூலி ஆட்கள் இத்திட்டத்தில் வழங்கப்படுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நடவு செய்வதற்கான கூலி செலவு குறைகிறது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா கூறியதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு பணிகள் செய்து வருகிறோம். அதில், தோட்டக்கலை பயிர்கள் நடவு செய்வதற்கு கூலி ஆட்கள் வழங்கப்படுகிறது. கொய்யா, நாவல், சப்போட்டா, மாதுளை போன்ற பழவகைகள் நடவு செய்வது மட்டுமல்லாமல், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் ஆட்கள் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தி இருந்தால், அதனை பராமரிக்கவும் ஆட்களைப் பயன்படுத்தி கொள்ளலாம். விவசாயிகள் சிறு, குறு சான்றிதழுடன் அந்தந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு இத்திட்டத்தில் பயன்பெறலாம்,’’ என்றார்.

Newsletter