மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் நீலகிரி மலைப்பூண்டு சீசன் துவக்கம் : நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை : மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் நீலகிரி மலைப்பூண்டு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மலைப்பூண்டினை வாங்க வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் நீலகிரி மலைப்பூண்டு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மலைப்பூண்டினை வாங்க வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மலைக் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் பூண்டு என அனைத்து வகையான விவசாயப் பொருட்களையும் சந்தைப்படுத்த மேட்டுப்பாளையத்தில் தனித்தனியாக மொத்த ஏல மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, காய்கறிகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அதனை தமிழகத்தின் உள் மாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.



இந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பூண்டின் சீசன் தொடங்கியுள்ள நிலையில், அதன் வரத்தும் அதிகரித்துள்ளது. நீலகிரி மலப்பூண்டு நல்ல காரத்தன்மையுடன் இருப்பதால், சந்தையில் இதற்கென தனி வரவேற்பும் இருந்து வருகிறது. மூன்று மாதங்கள் வரை மட்டுமே இருக்கக் கூடிய இந்த சீசன், தற்போது துவங்கியுள்ள நிலையில், அதனை வாங்க வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதன் விலையும் அதிகரித்துள்ளது. 



முதல் தர பூண்டின் விலை ரூ. 100 முதல் கிலோ ரூ. 190 வரை விற்பனையானது. இரண்டாம் தர பூண்டு கிலோ ரூ. 80 வரையும், பொடி வகைகள் 40 ரூபாயிக்கும் ஏலம் போனது. தற்போது, தொடங்கிய சீசன் காரணமாக வரத்தும் நன்றாக உள்ளதால், இந்த விலை உயர்வு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter