விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்குப் பயிற்சி

கோவை : விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை சார்பில் மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி வகுப்பு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

கோவை : விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை சார்பில் மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி வகுப்பு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சி வகுப்பில் தேசிய அங்கக உற்பத்தி திட்டம் மற்றும் அங்ககச் சான்று தரங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.



முன்னதாக, கோவை விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்ககத்தின் இயக்குநர் அ.மதியழகன் தலைமையுரையாற்றி பயிற்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு, அங்கக வேளாண்மை, அங்கக பயிர்களுக்கு சத்து மேலாண்மை மற்றும் களை நிர்வாகம், அங்கக வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக பண்ணைப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் மற்றும் அங்ககச் சான்று நடைமுறைகள் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட விதைச் சான்று இணை இயக்குநர் அ. செல்வராஜன், விதை ஆய்வு இணை இயக்குநர் மு.வே. மோகன சுந்தரம், கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளம்குன்றா அங்கக வேளாண்மைத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் ஏ. சோமசுந்தரம், உதவி பேராசிரியர் (பூச்சியியல்) கே.கணேசன், மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குநர் டாம்.பி.சைலஸ், மதுரை மண்டல அங்ககச்சான்று ஆய்வாளர் எல்.நாராயணமூர்த்தி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எழிலன், நமஸ்தே கிசான் ஹைதராபாத்தைச் சேர்ந்த கே. முரளி கிருஷ்ணா மற்றும் துர்க பிரசாத் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.



பயிற்சி வகுப்பினை மாவட்ட அங்ககச் சான்றளிப்புத்துறையின் தரமேலாளர் ஈப்பன், மதிப்பீட்டாளர் ஐரீன் மற்றும் துறை அலுவலர்கள் ஒருங்கிணைத்திருந்தனர். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ் மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டன.

Newsletter