தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய உயிர் தொழில்நுட்பவியல் கருத்தரங்கம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தாவரங்கள் உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் மையம் சார்பில் “பயோகான்கரன்சர் 2019” என்ற தேசிய அளவிலான உயிர்தொழில்நுட்பவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. கேரளா வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர். சந்திரபாபு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியதாவது :- உணவு உற்பத்தியில் தற்போதுள்ள சவால்களான மாசடைந்த நிலம் மற்றும் குறைந்த நிலத்தடி நீர் அளவு போன்றவற்றிற்கு உயிர் தொழில்நுட்பவியல் மூலம் தீர்வு காண முடியும் என குறிப்பிட்டார்.

முன்னதாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நீ. குமார் தனது முதன்மையுரையில், மாணவர்கள் தமது தொழில்நுட்பம் மற்றும் படைப்புத்திறன்களை வளர்த்துக் கொள்ள வெண்டும், என வலியஜறுத்தினார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 475 மாணவர்கள் தேசிய அளவில் கலந்து

கொண்டனர்.

Newsletter