கோவையில் 'வேளாண்துறையில் இளம் பெண்களின் எதிர்காலம்' குறித்த கருத்தரங்கம்

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையம் சார்பில் 'வேளாண்துறையில் இளம் பெண்களின் எதிர்காலம்' என்ற தலைப்பில் பல்கலைக்கழக பொன்விழா அரங்கில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையம் சார்பில் 'வேளாண்துறையில் இளம் பெண்களின் எதிர்காலம்' என்ற தலைப்பில் பல்கலைக்கழக பொன்விழா அரங்கில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருந்தரங்கில், கனடா நாட்டை சேர்ந்த குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சாரதா ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உலக அளவில் வேளாண் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார். 



அப்போது அவர் பேசியதாவது :- இந்தியா, கனடா, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில், வேளாண்துறையில் ஆண்களை விட பெண்கள் அதிக சவால்களை நேரடியாகவே சந்தித்து வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக, மத்தியபிரதேசத்தில் உள்ள சில கிராமங்களிலும், தமிழகத்தின் கோபிசெட்டிபாளையம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 



அப்போது, மற்ற நாடுகளைவிட இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் குறித்த தகவல்களைத் திரட்டுவது கடும் சவாலாக இருந்தது. ஆனால், இந்திய வேளாண் சந்தையில் இப்பெண்களின் பங்கு மிக முக்கியமானது. சவால்களைக் கலைந்து பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவித்தால் வேளாண் பொருளாதாரம் மேம்படும், இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ. குமார், சிறப்பு விருந்தினரை வரவேற்று உரையாற்றினார். மேலும், இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் பொருளியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter