கோவையில் சிறு தானியங்களிலிருந்து உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் சார்பில் சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் வரும் பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த வகுப்பில், பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனைப் பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் தயாரித்தல், ஆகியவை குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதில், கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500 பயிற்சி நாளன்று கட்டணமாக செலுத்த வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை- 641 003. 

தொலைபேசி எண்: 0422 - 6611268 / 1340

Newsletter