வறண்ட வானிலையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்., மையம் அறிவுரை

கோவை : கோவை மாவட்டத்தில் மழை பெய்யும் நாட்களுக்குப் பிறகு, நிலவும் வறண்ட வானிலையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுரை வழங்கியுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் மழை பெய்யும் நாட்களுக்குப் பிறகு, நிலவும் வறண்ட வானிலையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுரை வழங்கியுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- கோவையில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை நாட்களுக்குப் பிறகு, தொடர்ந்து வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுவதால் அனைத்துப் பயிர்களுக்கும் மண்ணின் ஈரத்தைப் பொறுத்து உடன் நீர்ப்பாசனம் செய்யவும்.

கரும்பில் இளங்குருத்து புழு வரவாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி வயலை நன்கு ஈரமாக வைத்துக் கொள்வதன் மூலம், இந்த தாக்குதலை குறைக்கலாம். மேலும், பயிர் மூடாக்கு செய்வதன் மூலமும், இந்த தாக்குதல் குறைவதோடு மட்டும் அல்லாமல் நீர் தேவையையும் குறைக்கலாம்.

வெப்பநிலை சற்று உயர்ந்து வருவதால் எள் விதைப்பு பிப்ரவரி 15 முதல் மேற்கொள்ளலாம். ஏற்ற இரகங்கள் டி.எம்.பி. 3, டி.எம்.பி. 4, டி.எம்.பி. 6, டி.எம்.பி. 7 கோ-1, வி.ஆர்.ஐ. (எஸ்வி) 1, எஸ்.வி.பி.ஆர்., 1, வி.ஆர்.ஐ. (எஸ்வி) 2. மேலும், களைகளை கட்டுப்படுத்த களைமுளைப்பதற்கு முன் உபயோகப்படுத்தக் கூடிய களைக் கொல்லிகளான ஒரு எக்டருக்கு அலக்குளோர் 1.5 கிலோ அல்லது மெட்டாலார்குளோர் 1 கிலோ என்ற அளவில் கலந்து உபயோகப்படுத்த வேண்டும்.

வறண்ட வானிலை நிலவுவதால் கரும்பில் இளங்குருத்து புழு வர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி வயலை நன்கு ஈரமாக வைத்துக் கொள்வதன் மூலம், இந்தத் தாக்குதலை குறைக்கலாம். மேலும், பயிர் மூடாக்கு செய்வதன் மூலமும், இந்தத் தாக்குதல் குறைவதோடு மட்டும் அல்லாமல் நீர் தேவையையும் குறைக்கலாம்.

தென்னையில் வெப்பநிலை உயர்ந்து வருவதால் கருந்தலைப்புழு வர வாய்ப்புள்ளது. ஆரம்ப காலமாக இருந்தால் ப்ரொக்கானிஸ் என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2,100 என்ற அளவில் வைக்க வேண்டும். இந்த ஒட்டுண்ணி தென்னை ஆராய்ச்சி நிலையம் ஆழியார் நகரில் கிடைக்கிறது. தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் 10 மில்லி மேனோ குரோட்டோபாஸ் என்ற மருந்தை வேர் மூலம் செலுத்த வேண்டும்.

மரவள்ளி கிழங்கில் வெள்ளை சுருள் பூச்சி தாக்குதலுக்கு மஞ்சள் ஒட்டுப்பொறி 6 இடங்களில் வைக்கவும். டையோசோபாஸ் 1 லி., நீருக்கு 2 மி.லி. (அ) அசாடிராக்டின் 3 மி.லி தெளிக்கவும்.

தற்போது, நிலவும் வானிலையால் மரவள்ளி கிழங்கில் வெள்ளைசுருள் பூச்சி தாக்குதல் வர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் வயலை நன்கு கண்காணித்து தாக்குதல் தென்பட்டால், மஞ்சள் ஒட்டுப்பொறி 5 அல்லது 6 இடங்களில் வைக்கவும். தேவைப்பட்டால் டையோசோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அல்லது இமிடாகுளோரோபிட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.6 மில்லி அல்லது அசாடிராக்டின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி வீதம் கலந்து தெளிக்கவும்.

காற்றின் வெப்பநிலை அதிகரிப்பதாலும், ஈரப்பதம் குறைவதாலும் ஏற்படும் வெப்ப அயற்சியினை போக்க கால்நடைகளுக்கு போதிய குடிநீர் வசதி செய்யவும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter