சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.29.94 லட்சம் மானியம் : கோவை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை ரவிசந்திரன் அறிவிப்பு

கோவை : சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு ரூ.29.94 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் (பொ) துரை ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை : சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு ரூ.29.94 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் (பொ) துரை ரவிசந்திரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த வையம்பாளையம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் மானியவிலையில் ராமசந்திரன் தோட்டத்தில் 9 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைந்துள்ளதைப் பார்வையிட மாவட்ட ஆட்சியர் (பொ). துரை.இரவிசந்திரன் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மாவட்ட ஆட்சியர் (பொ) .துரை.இரவிசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;- நாட்டின் மிக வலிமையான பிரிவாக விளங்கும் வேளாண்மை, பொருளாதார முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாகத் திகழ்கிறது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு கொள்கைகளை வகுத்ததோடு மண்வள மேலாண்மை, திறன்மிகு நீர் பயன்பாடு, தரமான இடுபொருட்கள் விநியோகம், பண்ணை இயந்திரமயமாக்குதல், உட்கட்டமைப்பு மேம்பாடு, விரிவாக்க முறைக்கு புத்துயிரூட்டுதல், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகளை அதிகளவில் பயன்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாடு போன்ற உத்திகளை வகுத்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் 2017 -2018ஆண்டில் 1176 விவசாயிகளுக்கு ரூ.514.68 லட்சம் மதிப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் பயிர்களான கரும்பு, தென்னை, மக்காச்சோளம், பருத்தி, பயிறு வகைகள் மற்றும் இதர பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் அமைக்க ரூ.881.69 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், கொண்டையம்பாளையம் ஊராட்சியில், வையம்பாளையம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானிய பெறப்பட்டு ராமசந்திரனின் தோட்டத்தில் 9 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் முறையில் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. 

வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன திட்டத்தின் மூலம் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 % மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 

வறட்சி காலங்களில் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், பயிரின் வேர்களுக்கு அருகிலேயே நீரை பாய்ச்சுவதால் களைகளை கட்டுப்படுத்திடவும், ஆட்கள் பற்றாக்குறையை குறைத்து அதிக மகசூலை அடைந்திடவும், உரத்திற்கான செலவு 50 முதல் 60 சதவீதம் வரை சேமிக்கப்படுவதாலும் சொட்டுநீர் பாசனம் விவசாயத்தில் முக்கிய பங்கு வகுக்குகிறது,என்றார். 

இதையடுத்து, சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், சிட்டா, அடங்கல், நில உரிமைச்சான்று, ரேஷன்கார்டு, ஆதார்எண், நீர் ஆய்வு அறிக்கை மற்றும் சிறுகுறு விவசாயி சான்றுடன் (சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும்) வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்தந்த, பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொண்டு மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம், எனவும் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் பானுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) இந்திராதேவி, உதவி இயக்குநர் நிர்மலா, உதவி அலுவலர் மாணிக்கவாசகம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Newsletter