கோவை வேளாண்மைப் பல்கலை,. சார்பில் பழங்குடியின விவசாயிகளுக்கு நூற்புழு பயிற்சி

கோவை : கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறை சார்பில் பழங்குடியின விவசாயிகளுக்கு நூற்புழு பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை : கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறை சார்பில் பழங்குடியின விவசாயிகளுக்கு நூற்புழு பயிற்சி வழங்கப்பட்டது. 



அகில இந்திய ஒருங்கிணைந்த நூற்புழு ஆய்வு திட்டத்தின் கீழ், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறை சார்பில் ஈரோடு மாவட்டம், தாளவாடி, தலமலை ஊராட்சி ராமர் அணை பழங்குடியின விவசாயிகளுக்கு நூற்புழு தாக்குதலை கண்டறிதல் மற்றும் நூற்புழு மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. 

இப்பயிற்சி முகாமிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறை பேராசிரியை அனிதா தலைமை தாங்கினார். மாவட்ட வனசரக அலுவலர் பழனிசாமி முன்னிலை வகித்தார். 

இதனைத் தொடர்ந்து, பயிர்களில் நூற்புழுக்கள் எவ்வாறு தாக்கி அழிக்கிறது, நூற்புழு தாக்குதலால் பயிர்களில் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் பயிர்களை பாதிக்கும் நூற்புழுக்களை உயிரியல் நூற்புழுக் கொல்லிகளைக் கொண்டு கட்டுப்படுத்துவது குறித்து நூற்புழு பேராசிரியர்கள் ஜோதி, கலையரசன் மற்றும் சொர்ணகுமாரி ஆகியோர் விளக்கினர். 

மேலும், பயிற்சியில் பங்கு பெற்ற பழங்குடியின விவசாயிகள் அனைவருக்கும் நூற்புழு மேலாண்மைக்கான இடுபொருட்கள் வழங்கப்பட்டது. 

Newsletter