பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு : தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கோவை : பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.

கோவை : பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பனிக்காலம் தொடங்கியுள்ளது. கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடும் பனி காரணமாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளிச் செடிகள் கருகி வருகின்றன. இதனால், தக்காளி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ. 15-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து சாய்பாபா காலனி எம்.ஜி.ஆர். காய்கறி சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடும் பனிப்பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே, சந்தைக்கு தேவைப்படும் அளவிற்கு தக்காளி வரத்து இல்லை. தற்போது, கோவைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது. பனிப்பொழிவு தொடர்வதால் தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது' என்றனர்.

வரும் நாட்களில் தமிழகத்தில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தக்காளி உட்பட மற்ற காய்கறிகளின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter