கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பொங்கல் பரிசாக புதிய பயிர் ரகங்கள் வெளியீடு

கோவை : பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளின் நன்மைக்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளின் நன்மைக்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 



தரமான விதையே உயர் விளைச்சலுக்கு ஆதாரம். ஆண்டுதோறும் விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு பயிர்களில் அதிக மகசூல் தரக்கூடிய புதிய ரகங்களை விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட பல்வேறு ரகங்கள் தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடையே பிரபலமாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், நடப்பு ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தினால் விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட 14 புதிய பயிர் ரகங்களை வெளியிட மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக்குழு கடந்த 7 -ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. 

இதையடுத்து, நெற்பயிரில் ஏ.டி.டீ 53, வி.ஜி.டி 1, சாமை ஏடி.எல் 1, பாசிப்பயறு வி.பி.என் 4, நிலக்கடலை பி.எஸ்.ஆர் 2, ஆமணக்கு ஒய்.டி.பி.1, மரப்பயிரில் கடம்பு எம்.டி.பி 1, சுரைக்காய் பி.எல்.ஆர் 2, பூண்டு ஊட்டி -2, நட்சத்திர மல்லிகை கோ 1, உருளைக்கிழங்கு குப்ரி சஹ்யாத்ரி, வாழையில் காவிரி கல்கி, காவிரி சபா, காவிரி சுகந்தம் ஆகிய ரகங்கள் பொங்கல் பரிசாக விவசாயிகளின் நன்மைக்காக வெளியிடப்பட்டது.



Newsletter