கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் தீவிரம்

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, டீன், இயக்குனர் ஆகிய பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தன. இந்த பதவிகளுக்கான பொறுப்புகள் அனைத்தும் பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், புதிய துணைவேந்தர் குமார் பொறுப்பேற்ற பின்னர், காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி, பதிவாளர், டீன், இயக்குனர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்ட 27 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி மாதம் 3 -ம் தேதி வரை பெறப்பட்டன.

இதையடுத்து, பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. பின்னர் அவர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter