தேங்காய் மற்றும் கொப்பரை விலை அதிகரிக்க வாய்ப்பு : சந்தை ஆய்வுகள் முடிவு வெளியீடு

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை மற்றும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்தில் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை மற்றும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்தில் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 

தேங்காய் விளைச்சலில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இம்மாநிலங்கள் சேர்ந்து நாட்டின் மொத்த உற்பத்தியில் 81 சதவீதம் பங்களிக்கின்றன. 

தேசிய தோட்டக்கலை வாரியம் 2017 -18 -ம் ஆண்டின் 3 -வது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, தேங்காய் 20.79 லட்சம் ஏக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. அதில் 162.28 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. இந்நிலையில், பண்டிகை காலம் மற்றும் கஜா புயலின் தாக்கம் காரணமாகத் தேங்காய்களின் தேவை அதிகமாக வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், கொப்பரை வரத்தானது உடுமலை பேட்டை, பல்லடம், கோபி செட்டிபாளையம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து பெருந்துறை சந்தைக்கு வருகிறது. கர்நாடக தேங்காய் வரத்தானது பிப்ரவரி 19 -ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து, விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 18 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல்புந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை மற்றும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்திலும் சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது. 

இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில், ஜனவரி - மார்ச் வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.15 முதல் ரூ.17 வரை இருக்கும். மேலும், தரமான கொப்பரை கிலோவுக்கு ரூ.105 ஆக இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். 

Newsletter