2060 -ம் ஆண்டில் உணவு தானியங்களின் தேவை 160 கோடி டன்னாக இருக்கும் : கோவையில் சுபாஷ் பாலேக்கர் தகவல்

கோவை : ஈஷா விவசாயம் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் பிப்ரவரி 2 -ம் தேதி முதல் 10 -ம் தேதி வரை இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

கோவை : à®ˆà®·à®¾ விவசாயம் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் பிப்ரவரி 2 -ம் தேதி முதல் 10 -ம் தேதி வரை இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. 

இது குறித்து கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல வேளாண் வல்லுநர் சுபாஷ் பாலேக்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

அப்போது சுபாஷ் பாலேக்கர் பேசுகையில், "நஞ்சில்லா உணவும் நோயில்லா வாழ்வும் வாழவே, ஈஷா விவசாயம் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் 9 நாட்களுக்கு விவசாயிகளுக்கு இலவச பயிற்சிகள் நடத்தப்படவுள்ளது. இதில் 1000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்தியா முழுவதிலும் 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. அதில் தமிழக விவசாய நிலங்கள் தான் அதிகம். என்னுடைய தொழில்நுட்ப இயற்கை விவசாய முறையில் முதலாவது ஆண்டு அதிக விளைச்சலைப் பெற முடியும். இதன் உற்பத்தி முறையில் ஊடுபயிர்கள் உற்பத்தியில் அதிக லாபம் பெற முடியும். இதனால் விற்பனையில் அதிக லாபம் ஈட்ட முடியும். 

உதாரணத்திற்கு ரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள் ஒரு கிலோ ரூ.35 ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஆனால், இயற்கை வேளாண் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.70 வரை கிடைக்கும். வரும் 2060 -ல் இந்தியாவின் உணவு தானியங்களின் தேவை, சுமார் 160 கோடி மெட்ரிக் டன்னாக இருக்கும். இதனை முன்னிட்டு அடுத்த 20 ஆண்டுகளில் உற்பத்தி அளவை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டியுள்ளது.

இந்த நவீன விவசாய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். இதனால் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். ஆந்திரா, கேரளா, சட்டீஸ்கர், ஹிமாச்சல பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் இந்த தொழில்நுட்பம் ஏற்று கொள்ளப்பட்டதோடு செயல்பட்டும் வருகிறது. ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு தொடர்பு கொள்ளவில்லை. மேலும், விவசாயத்தில் பெரும் சவலாக பருவ மாற்றம், விவசாயிகளின் தற்கொலை, இளைஞர்கள் விவசாயம் தவிர்த்து பெரு நகரங்களுக்கு வேலை தேடி செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. 

ஐ.நா. சபை இந்த இயற்கை விவசாய தொழில்நுட்ப முறையை அங்கீகரித்து உள்ளது. ரசாயன விவசாய பொருட்களின் விலையை விட இயற்கை விவசாய பொருட்களின் விலை குறைவு. பஞ்சாப் மாநிலத்தில் 99% விவசாய நிலங்கள் இருக்கிறது. அங்கு விவசாயிகள் தற்கொலை அதிகம். இதற்கு அதிக உற்பத்தி செய்யப்பட்டும் குறைந்த விலை கிடைப்பதே காரணம்," என்றார்.

Newsletter