தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் - ஐ.டி.சி. சுநேஹ்ரா கால் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை : விவசாயத்தில் நீர் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் - ஐ.டி.சி. சுநேஹ்ரா கால் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை : à®µà®¿à®µà®šà®¾à®¯à®¤à¯à®¤à®¿à®²à¯ நீர் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் - ஐ.டி.சி. சுநேஹ்ரா கால் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர்தொழில்நுட்ப மையத்தில் உள்ள சிறந்த தொழில்நுட்பங்களின் மூலம் பயிர்களுக்கு அதிகளவு தண்ணீர் செல்ல வகை செய்ய முடிகிறது. இந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து எடுத்துக் கூறுவதுடன், விவசாயிகளுக்கு நன்கு பயிற்சி அளித்து, நீர்சேமிப்பு மற்றும் பயிர்களை மேம்படுத்த முடியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், விவசாயத்தில் நீர் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் - ஐ.டி.சி. சுநேஹ்ரா கால் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர்தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் பி.ஜே. பாண்டியன் மற்றும் கோவை ஐ.டி.சி. பேக்கேஜிங் மற்றும் ஸ்பெஷாலிட்டி பேப்பர் யூனிட்டின் தலைவர் பிரணாவ் சர்மா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பஞ்சாயத்து, விவசாயிகள் குழு, தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பவானி நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், மேல்பவானி ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் வறட்சியை ஒழித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். இது விவசாய பகுதிகளில் நீர்பாதுகாப்பை மேம்படுத்த உதவுகிறது. 

Newsletter