தோட்டக்கலைத் துறை மூலம் தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை : தோட்டக்கலைத் துறை மூலம் தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : தோட்டக்கலைத் துறை மூலம் தொழில் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தோட்டக்கலைத்துறையில் தொழிற்பழகுநர் பயிற்சி வேலையில்லா படித்த இளைஞர்களுக்குப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான மாற்று வழிகாட்டியாக திகழ்வதுடன், இளைஞர்கள் திறமையை வெளிக்கொணர்வதோடு, ஒரு பணியினை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ள உதவுகிறது.

கார்டன் பயிற்சிக்கு குறைந்த கல்வித் தகுதியாக 10 அல்லது 12-ம் வகுப்புடன் தோட்டக்கலையில் டிப்ளமோ இருத்தல் வேண்டும், இது தவிர வரைவு சிவில், எலக்ட்ரிசியன், பிளம்பர், பிட்டர், தொழிற் பழகுநர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தகுதித் தொகுப்பில் உள்ள குறுகிய கால திறன்களில் பயிற்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

ஓராண்டு பயிற்சி முடித்த பின் தொழில்முனைவோர் பயிற்சி மையத்தினர் நடத்தும் ஆன்லைன் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற பின் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் ஓராண்டிற்கு இம்மாவட்டத்திற்கு 15 தொழில்முனைவோர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாதம் ரூ.7,000 உதவி தொகையாக வழங்கப்படும். 

எனவே, தொழில் பழகுநர் பயிற்சியில் ஈடுபட ஆர்வம் உள்ள இளைஞர்கள் tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பயன்பெற வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter