காலநிலை மாற்றத்தால் தேயிலை செடிகளில் கொப்பள நோய் தாக்குதல் : நீலகிரி விவசாயிகள் கவலை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மேகமூட்டமான காலநிலையின் காரணமாகத் தேயிலை செடிகளில் கொப்பள நோய் தாக்குதல் அதிகரித்துக் காணப்படுகிறது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மேகமூட்டமான காலநிலையின் காரணமாகத் தேயிலை செடிகளில் கொப்பள நோய் தாக்குதல் அதிகரித்துக் காணப்படுகிறது.

 

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாகத் தேயிலை விவசாயம் உள்ளது. உதகை, கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர் உட்பட மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி 3 மாதங்கள் நல்ல மழை பெய்தது. 

இதனைத் தொடர்ந்து விவசாயிகள், தேயிலைச் செடிகளுக்கு உரமிட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாலும், மழை காரணமாகவும் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்தது. இது மட்டுமல்லாது மழைக்குப் பின் நன்கு வெயில் அடித்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகரிக்கும். இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்குப் பெய்ய தவறிவிட்டது. இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. 



இதையடுத்து, லேசான வெயில், மேகமூட்டமான காலநிலை, பனிப்பொழிவு என பல்வேறு வகையான மாறுபட்ட காலநிலைகள் நிலவுவதால் பசுந்தேயிலை வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. மழைக்குப் பின் போதுமான அளவு வெயில் இல்லாததால், தேயிலை செடிகளில் வளர்ந்துள்ள தேயிலை கொழுந்து இலைகளில் கொப்பளநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

உதகை, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் கொப்பள நோய் தாக்குதலால் பல ஏக்கர் பரப்பளவிலான தேயிலை செடிகள் பாதிப்படைந்துள்ளன. கொப்பள நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பசுந்தேயிலையை பறித்து தேயிலை தூள் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது. எனவே, தேயிலை மகசூல் அதிகரித்த போதும் நோய் தாக்குததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், மேகமூட்டமான காலநிலை தொடர்ந்து வருவதால் கொப்பளநோய் தொடர்ந்து பரவி வருகிறது.

Newsletter