பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கோவை : பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து, தங்களது பயிரினை காப்பீடு செய்து கொண்டு பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

கோவை : à®ªà®¿à®°à®¤à®® மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து, தங்களது பயிரினை காப்பீடு செய்து கொண்டு பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் :- 2016-17-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்காப்பீட்டுத் திட்டம், நடப்பு 2018-19-ம் ஆண்டிலும் நடைமுறைக்கு வந்துள்ளதால், கோவை மாவட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை, நடப்பு இராபி பருவத்தில் பயிரிட உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். அந்த வகையில், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயிறு மற்றும் கரும்பு ஆகிய வேளாண் பயிர்கள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள தகுதியானவை.

காப்பீட்டுத் தொகையாக விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பயிர் சாகுபடி செலவினத் தொகையில், 1.5 முதல் 2.58 சதவீத தொகையை மட்டும் பிரீமியமாக செலுத்தினால் போதும். ஒப்புதல் அளிக்கப்பட்ட மீதமுள்ள பிரீமியத் தொகையினை அரசே ஏற்றுக் கொள்ளும். இந்த வகையில், கரும்பு பயிருக்கு 2.58 சதவீதமும், இதர அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு 1.5 சதவீதமும் பிரீமியம் தொகையாக செலுத்தினால் போதுமானது. 

இத்திட்டத்தின் கீழ் 4 விதமான இழப்புகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. அதாவது, போதுமான நீர் இல்லாததால், தவறிய விதைப்பு, விதைத் பயிர்களில், இயற்கை இன்னல்களால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப்பின், இருவார காலத்திற்குள், புயல் மற்றும் அதிமழையால் களத்தில் ஏற்படும் இழப்பு மற்றும் நிலச்சரிவினால் ஏற்படும் இழப்பு என 4 விதமான இழப்புகளுக்கு காப்பீடு செய்யலாம். 

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன் எதுவும் பெறாத விவசாயிகள் தன் விருப்பத்தின் பேரில், பொது சேவை மையங்கள், தொடக்கக் கூட்டுறவு வங்கிகளுக்குச் சென்று, விண்ணப்பித்து, உரிய பிரீமியம் தொகையை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter