சர்வதேச மண்வள தினத்தை முன்னிட்டு உதகையில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை விநியோகம்

நீலகிரி : சர்வதேச மண்வள தினத்தை முன்னிட்டு 3.867 இடங்களில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை இன்று உதகையில் வழங்கப்பட்டது.

நீலகிரி : சர்வதேச மண்வள தினத்தை முன்னிட்டு 3.867 இடங்களில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை இன்று உதகையில் வழங்கப்பட்டது.

இன்று உலகம் முழுவதும் மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக இன்று உதகையில் உள்ள தோட்டக்கலைத் துறை வளாகத்தில் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மண்வள தினம் கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தாண்டு 10 ஹெக்டருக்கு ஒரு மண் மாதிரி என மொத்தம் 3,867 இடங்களில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்த பின்பு, ஆய்வு முடிவுகள் மற்றும் உரப்பரிந்துறைகள் அடங்கிய மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.


மண்வள அட்டையிலுள்ள உரப்பரிந்துறையின்படி, முன்மாதிரி கிராமங்களில் விற்பனை முனை இயந்திரம் மூலம் உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

பசுமை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள இல்லங்களை மேலும் பசுமை சேர்க்கும் முயற்சியாக தோட்டக்கலைத் துறை சார்பில் இல்லந்தோறும் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் பழநாற்றுகள், மலர்நாற்றுகள், மரநாற்றுகள் மற்றும் அழகுசெடிகள் ஆகியவற்றை வருகை தரும் உற்றார் உறவினர்களுக்கு சுபநிகழ்ச்சியின் நினைவு பரிசாக வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இன்று உதகை வட்டாரத்தில் 100 விவசாயிகளுக்கு இரண்டு நாற்றுகள் வீதம் 200 நாற்றுகள் வழங்கப்பட்டது.


மண்வள பாதுகாப்பு தினத்தையொட்டி இயற்கை வேளாண்முறை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காளிபிளவர், புருக்கோலி, சைனீஸ் கேபேஜ் உள்பட பல தரப்பட்ட காய்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Newsletter