தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இன்று உலக மண் தின கருத்தரங்கு

கோவை : உலக மண் தினத்தையொட்டிய சிறப்பு கருத்தரங்கம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.


கோவை : உலக மண் தினத்தையொட்டிய சிறப்பு கருத்தரங்கம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.



மண் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் டிசம்பர் 5 -ம் தேதி மண் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் மண்ணின் வளம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த தினத்தை சிறப்பிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சிறப்பு கருத்தரங்கு ஏற்பாடு செய்தது.



இன்று காலை நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை துணைவேந்தர் நீ.குமார் தலைமையுரையாற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மதுரை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, "முடிவில்லா வாழ்க்கையின் ஆன்மா - மண்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


மேலும், வளமான விவசாயத்திற்கு மண்ணின் அவசியம் குறித்தும், சமீபகாலமாக மண்ணை மாசுப்படுத்தும் பல்வேறு காரணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. வேளாண் கல்லூரியின் மண் அறிவியல் துறை மாணவர்கள் மற்றும் ஆராய்சியாளர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter