இந்தியாவின் முதல் பூச்சி அருங்காட்சியகத்தின் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அளவிலான அஞ்சல்துறை கலை நிகழ்ச்சி விழா மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அளவிலான அஞ்சல்துறை கலை நிகழ்ச்சி விழா மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

நேற்று அஞ்சல் துறை சார்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அளவிலான அஞ்சல்துறை கலை நிகழ்ச்சி விழா நடைபெற்றது. இதில் இந்தியாவின் முதல் பூச்சி அருங்காட்சியகத்தின் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நீ. குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், மேற்கு மண்டலத்தின் அஞ்சல் துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யூ இந்தியாவின் முதல் பூச்சி அருங்காட்சியகத்தின் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட, அதனை டி.என்.ஏ.யூ துணைவேந்தர் நீ.குமார் பெற்றுக் கொண்டார்.

Newsletter