டிச.6-ம் தேதி வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி வகுப்பு

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பூச்சியியல் துறை சார்பில் தேனீ வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பூச்சியியல் துறை சார்பில் தேனீ வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.

புதிய தொழில் முனைவோருக்கான பல்வேறு வகையான பயிற்சி வகுப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு பற்றி பூச்சியியல் துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெறும். அந்தப் பயிற்சி வகுப்பு இம்மாதம் வரும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில், தேனீ இனங்களைக் கண்டுபிடித்தல், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மசூல் அதிகரிப்பது, தேனைப் பிரித்தெடுத்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை ஆகியவை பற்றி பயிற்சியளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாளன்று காலை 9 மணிக்கு முன்னதாக வர வேண்டும். பயிற்சி கட்டணம் ரூ. 500 மட்டும் வசூலிக்கப்படும். 

மேலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழுமையாக இந்தப் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 

Newsletter