கஜா புயல் தாக்கத்தால் கருகும் செங்காந்தழ் மலர்கள் : விவசாயிகள் கண்ணீர்

திருப்பூர் : திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள செங்காந்தழ் மலர்கள், கடும் பனிபொழிவு மற்றும் தொடர் மழையால் கருகி வருகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள செங்காந்தழ் மலர்கள், கடும் பனிபொழிவு மற்றும் தொடர் மழையால் கருகி வருகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர், வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செங்காந்தழ் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது பூக்கள் பூக்கும் தருணத்தில் கஜா புயலால் மழை மற்றும் அதிக பனி பொழிவின் காரணமாக செங்காந்தழ் மலர்கள் கருகி வருகிறது. ஆகவே, தோட்டக்கலைத்துறை இப்பகுதிகளில் உரிய கள ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



செங்காந்தழ் தோட்டக்கலை பயிர் சாகுபடி திருப்பூர் மாவட்டம் மூலனூர், தாராபுரம், வெள்ளக்கோவில் மற்றும் ஒட்டன்சத்திரம், அரவக்குறிச்சி பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு வருகிறது. புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பில் முக்கிய பொருளாக உள்ள கோல்சிசின் எனும் வேதிப்பொருள் இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படுவதால் ஒரு கிலோ விதைக்கு ரூ. 3,500-க்கு விலை கிடைப்பதாலும் இப்பயிர் அதிக அளவில் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் மூலனூர், வெள்ளகோவில் பகுதிகளில் மட்டும் இந்த ஆண்டு 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் செங்காந்தழ் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், கஜா புயலால் பொழிந்த மழையின் காரணமாக மலர்கள் அதிக அளவில் கருகி வருகிறது.

இதனால், காய் பிடிப்பது குறைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பே ஏற்படும் நிலை உள்ளது. மேலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் சரியான வழிகாட்டுதல் மற்றும் கண்டுகொள்ளாத நிலையால் விவசாயிகள் மருந்துகளை தெளித்தும் மலர்கள் கருகுவதை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

எட்டு மாத கால பயிரான செங்காந்தழ் சாகுபடியில் விதை,உரம், நடவு மற்றும் அறுவடை வரை ஏக்கருக்கு சுமார் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை செலவு செய்து விதைகளை உற்பத்தி செய்யும் நிலையில், இந்த ஆண்டு பனி பொழிவும் அதிகமானதும், மலர்கள் கருகுவதற்கு ஒரு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். 



மேலும், கண்வலி விதைக்கான விற்பனை சந்தை ஓசூர்,மும்பை மற்றும் டெல்லியில் மட்டுமே இருப்பதால் இங்கு இடைத்தரகர்கள் சொல்வதே விலையாக நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து வருவதாகவும், அரசு தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்தபட்ச ஆதர விலையினை அறிவிப்பதுடன், கூட்டுறவு சங்கங்களில் பொருளீட்டு கடன் அளிக்கவும், புயல் பாதிப்பினை கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என கண்வலி விதை உற்பத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter