அங்கக வேளாண்மை, மற்றும் செலவில்லா வேளாண்மைக் குறித்த இரண்டாவது நாள் கலந்துரையாடல்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், இந்திய பண்ணைத்திட்ட ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான அங்கக வேளாண்மை கலந்தாய்வின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், இந்திய பண்ணைத்திட்ட ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான அங்கக வேளாண்மை கலந்தாய்வின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. 



தேசிய அளவிலான அங்கக வேளாண்மை கலந்தாய்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக அங்கக வேளாண்மை, மற்றும் செலவில்லா வேளாண்மைக் குறித்த அறிவுசார் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில், செலவில்லா வேளாண்மையைப் பயன்படுத்தினால் குறைந்த செலவில் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என தஞ்சாவூரை சேர்ந்த சித்தர், கோவை நாகரத்தினம், சிவ கணேஷ், கேரளாவைச் சேர்ந்த வினயன் ஆகியோர் பேசினார்கள்.

ரசாயன விவசாயத்திலிருந்து மீண்டு இயற்கை விவசாயத்தினை செய்வதால் அதிக மகசூலும் லாபமும் இருக்கும் என பேசிய மதுராம கிருஷ்ணன் மற்றும் எத்திராஜீலு ஆகிய இருவரும் அது சார்ந்த ஆலோசனைகளையும் மாணவர்களுக்கு வழங்கினர். 

இது குறித்து தமிழ்நாடு வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் உதவி பொது இயக்குநர் எஸ்.பாஸ்கர் பேசுகையில், " விஞ்ஞான ரீதியில் செலவில்லாத விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும். மேலும், விவசாயிகளிடம் செலவில்லாத வேளாண்மை குறித்து தவறான கருத்துகள் சென்றடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்," என்றார்.

கலந்துரையாடலின் இறுதியில், இயற்கை விவசாயத்துக்குத் தேவையான இடுபொருட்கள் தரமானதாகக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வதற்கு ஆய்வகங்களை உருவாக்க வேண்டும். 



இயற்கை வேளாண்மையைப் பின்பற்றும் இடங்களை தொலையுணர் அறிவியல் நுட்பங்கள் மூலம் புவிசார் குறியீடு இடங்களாகக் கண்டறியப்பட வேண்டும். இயற்கை வேளாண்மையைப் பின்பற்றினால் மட்டுமே செலவில்லா வேளாண்மையை அணுக வேண்டும் போன்ற முக்கியமான பரிந்துரைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

Newsletter